பல்லியா: டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு எதிராக பேஸ்புக்கில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்பியதாகக் கூறி உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆனந்த் ஸ்வரூப் மீது பீம்புரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்லியா மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் தன்பதி தேவியின் பிரதிநிதி அளித்த புகாரின் அடிப்படையில், ஷாம்பவி பீடத்தின் தலைவரும், காளி சேனாவின் நிறுவனருமான ஸ்வரூப் மீது பிஎன்எஸ் பிரிவு 353(2) (பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள்) மற்றும் ஐடி சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


