அம்பேத்கர், பெரியார் உரையாடும் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை காண நேர்ந்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
லண்டன் : லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லண்டனில் அம்பேத்கர் படித்தபோது அவர் வசித்த இல்லத்தை பார்வையிட்டேன். அம்பேத்கர், பெரியார் உரையாடும் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை காண நேர்ந்தது. இந்தியாவில் சாதியால் ஒடுக்கப்பட்ட இளைஞர், அறிவின் மூலம் உயர்ந்து லண்டனில் மரியாதை பெற்றார். அம்பேத்கர் இல்லத்தில் வியப்பும், மரியாதையும் கலந்த உணர்வு ஏற்பட்டது,"இவ்வாறு தெரிவித்தார்.