பாட்னா: பீகார் மாநிலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்திற்கான விளம்பர தூதராக பிரபல நடிகை நீத்து சந்திரா, நடிகர் கிராந்தி பிரகாஷ் ஜா ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்தது. பேரவை தேர்தலின் போது நீது சந்திரா சில கட்சிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசார விளம்பர தூதர் பதவியில் இருந்து நீது சந்திராவை தேர்தல் ஆணையம் நேற்று நீ்க்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
+
Advertisement


