திருப்பூர்: அம்பானிக்காகத்தான் பிரதமர் மோடி, ரஷ்யாவுடன் உறவை தொடர்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார். கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் அம்பானி நிறுவனம் வாங்க அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு அம்பானி கச்சா எண்ணெய் வாங்கினார். கச்சா எண்ணெயை சுத்திகரித்து அதனை ஐரோப்பிய நாடுகளுக்கு அம்பானி விற்கிறார். இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் வலியுறுத்தி கேட்காததால் இந்தியாவுக்கு 50% வரி விதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
+
Advertisement