Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,253 பேர் கொலை: குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு

பிரேசில்: அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய சுற்றுசூழல் ஆர்வலர்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. பிரேசில், பெரு, ஒலிவியா உள்பட 9 நாடுகளில் பறந்து விரிந்து 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமேசான் காடுகள் உள்ளன. 39 ஆயிரம் கோடி மரங்கள் 16 ஆயிரம் வகையான உயிரினங்கள் இங்கு உள்ளன. பல்வேறு பழங்குடி இனத்தவரும் வசிக்கின்றனர். அமேசான் காடுகள் ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி டன் ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன.

ஆனால் உலகமயமாக்கல் மற்றும் மனிதர்களின் பேராசையால் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதாக போராட்டங்கள் வெடித்துள்ளன. இவ்வாறு போராடும் இயற்கை ஆர்வலர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவதாக லண்டனை சேர்ந்த குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. 2012-24 வரையிலான 12 ஆண்டுகளில் 2253 சுற்றுசூழல் ஆர்வலர்கள் மர்மமாக கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி அதிகபட்சமாக பிரேசிலில் 365 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர், கொலம்பியாவில் 250 நபர்களும், பெருவில் 225 நபர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 124 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.