Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமேசானில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு! 1.50 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு..யார் விண்ணப்பிக்கலாம்?

சென்னை: இந்தியாவில் வரவேற்கும் பண்டிகை கால முன்னிட்டு அமேசான் நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 1.50 லட்சம் தற்காலிக பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பினரும் விண்ணப்பிக்கலாம். தேர்தெடுக்கப்படும் நபர்கள் கோவை உட்பட தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களிலும் பணி அமர்த்தப்படுவார்கள். அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டுவரும் அமேசான் நிறுவனம், மின்னணு வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆயில் விளம்பரம், டிஜிட்டல் ஸ்டீம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளில் முன்னணி நிறுவனமாக உள்ளது.

விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து வரும் பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் இந்த புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ஒர்க் என்பது ஷார்ட் சென்டன்ஸ், லாஸ்ட் மைல் டெலிவரி ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்யவேண்டி இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முக்கிய ஆவணங்களை நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அதன்படி மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதரபாத், லக்னோ, கொச்சி, கோவை, இந்து ராய்ப்பூர் உட்பட பல இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளன. இது குறித்து அமேசான் இந்தியாவில் செயல்பாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் செயல்பாடுகள் பிரிவு தலைவர் கூறுகையில் பண்டிகை காலத்திற்காக பணியில் சேரும் தற்காலிக ஊழியர்களில் கணிசமானவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிரந்தர பணி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

அமேசான் பொறுத்தவரை அலுவலக பணியாளர்கள் முதல் விநியோக பணியாளர்கள் வரை அனைவரின் பாதுகாக்கும் மற்றும் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பணியாளர்களுக்கு கண் மற்றும் பல் சிகிச்சை உட்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார். தற்போது இந்த பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருவதால் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.