ஜாக்ரெப்: குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் அமான் ஷெராவத் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாசிடோனியா வீரர் விளாடிமிர் எகோரோவ் உடன் நேற்றைய போட்டியில் அமான் மோத இருந்தார்.
ஆனால், நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு அதிகமாக அமான் இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியானது. கடந்த 2024ல் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் அமான் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.