திண்டுக்கல்: திண்டுக்கல்லுக்கு நேற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அளித்த பேட்டி: செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார். சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளது, விரைவில் சந்திப்பேன். இதேபோல் டிடிவி.தினகரன், செங்கோட்டையன் அனைவரையும் சந்திப்பேன். விஜய் பிரசாரத்தில் மின்சாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு வரவில்லை. அவருடன் கூட்டணியா என கேட்கிறீர்கள். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம், அது நல்லதாகவே நடக்கும். டெல்லி செல்வதற்கு பயணங்கள் தற்போது இல்லை. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2 நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் என்னுடன் பேசினார்.
சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். உறுதியாக சந்திப்போம் என கூறியுள்ளேன். இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை மாற்றினால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என டிடிவி.தினகரன் கூறியது பற்றி கேட்டதற்கு ஓபிஎஸ், ‘‘இதுகுறித்து டிடிவி.தினகரனிடம் தான் கேட்க வேண்டும்’’ என்றார்.