பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: திமுக 1999, 2001 தேர்தல்களில் பாஜவோடு கூட்டணி அமைத்து மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது.
அவங்க கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சி, நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சி. எங்கள் கூட்டணியை பார்த்தும் பயப்படுகின்றனர். அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், நீங்க ஏன் அச்சப்படுகிறீர்கள். கட்சிக்கு நிலையானது கொள்கை. தேர்தலில் வெற்றி பெறவே கூட்டணி வைக்கிறோம். அதிமுக கூட்டணி தேர்தலை சந்திக்கும், வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும்.
கரூரில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் முழுவதும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அடைமழை பெய்தாலும் விடாமல் இங்கேயே நின்று அடுத்தாண்டு தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைப்பதே நோக்கம் என்று நிற்கிறீர்கள். இது 172வது தொகுதி. இந்த கூட்டம்தான் எனக்கு முழு திருப்தி, மகிழ்ச்சி. இவ்வளவு மழை பெய்தும் பொருட்படுத்தாமல் நனைந்து கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் நன்றி.