தோல்வியில் முடியும் எல்லா மருத்துவ சிகிச்சைகளுக்கும், மருத்துவரை காரணம் எனக் கூற முடியாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: தோல்வியில் முடியும் எல்லா மருத்துவ சிகிச்சைகளுக்கும், மருத்துவரின் அலட்சியமே காரணம் எனக் கூற முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு மருத்துவர் தனது சிறந்த சிகிச்சையைக் கொடுத்தாலும் அது சில நேரம் தோல்வியிலும் முடியலாம். பிரசவத்திற்குப் பிறகு பெண் உயிரிழந்த வழக்கில், மருத்துவரைப் பொறுப்பாக்கி தேசிய நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.