குஜராத்: குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தவிர அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். 16 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பூபேந்திர படேலிடம் அளித்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில் பூபேந்திர படேல் இன்று இரவு ஆளுநரை சந்திக்கிறார். நாளை காலை காந்தி நகரில் நடைபெறும் விழாவில் குஜராத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா பங்கேற்க உள்ளனர்.
+
Advertisement