அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே நடைபெற்ற புனித காணிக்கை அன்னை தேவாலய தேர் பவனி விழாவில் திரளான் பக்தர்கள் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் அருகே மரியம்மாள்குளத்தில் அமைந்துள்ள புனித காணிக்கை அன்னை தேவாலயத்தில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த தேவாலயத்தில் நடப்பாண்டிற்கான தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனைகளை தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் காணிக்கை அன்னை எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேர் வீதிஉலா சென்ற நிலையில், வழியெங்கும் திரண்டிருந்த பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர். இப்பகுதியில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினரும் புனித காணிக்கை அன்னைக்கு மாலை, வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை காணிக்கையாக கொடுத்து வழிபட்டனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை பங்கு தந்தை அருட்பணி வளன் மற்றும் திருச்சபை நிர்வாக குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.