புதுடெல்லி: நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களில் அதிவேக இமிக்கிரேஷன் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. கடந்த 2024ல் முதன்முறையாக டெல்லி ஏர்போர்ட்டில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் சென்னைஉட்பட 7 விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக நாளை மேலும் 5 ஏர்போர்ட்களில் விரைவான இமிக்ரேஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. லக்னோ, திருவனந்தபுரம், திருச்சி, கோழிக்கோடு, அமிர்தசரஸ் விமான நிலையங்களில் இந்த திட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தொடங்கி வைக்கிறார்.