மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி உள்நாடு வருகை பகுதி 1 மற்றும் 3 முனையங்கள் மற்றும் சர்வதேச முனையம் வருகை பகுதி 2 முனையத்திலும், பெரிய அளவில் 3டி ஸ்கிரீன்கள் அமைத்து, நாட்டின் இயற்கை எழில்கள், சுற்றுலா தலங்களில் உள்ள சிறப்பு காட்சிகள், வனவிலங்குகள், கிராமப்புற விளை யாட்டுகள், பண்பாடு போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த 3டி பிரமிக்கத்தக்க காட்சிகள், சென்னை விமான நிலைய பயணிகள் மத்தியில் புதிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம் வரும் பயணிகள், புதிய அனுபவத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். தீபாவளி பண்டிகைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 3டி ஒளிபரப்பு காட்சிகள் நிரந்தரமாக சென்னை விமான நிலையத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.