மதுரை: தனது நகை திருடப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் இழப்பீடு கோரி பெண் தொடர்ந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி சிந்தாமணியைச் சேர்ந்த ஜோன் ஆண்ட்ரூஸ் பூர்ணிமா தாக்கல் செய்த மனுவில், 2022ல் திருச்சியில் இருந்து பேருந்தில் கீரனூர் சென்றபோது தனது 8 சவரன் நகை திருடு போனதாக பெண் புகார் அளித்துள்ளார். கீரனூர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
+
Advertisement
