சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.30 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள உணவு பாக்கெட்டுகள், சாக்லேட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாங்காக்கில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை அடுத்து விமான நிலையத்தில் சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
+
Advertisement
