காற்று மாசு காரணமாக டெல்லியில் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு நேரத்தை ரத்து செய்தது அம்மாநில அரசு. டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகளில் திறந்தவெளி மைதானங்களில் அடுத்த அறிவிப்பு வரும் வரை விளையாட தடை விதித்துள்ளது. மாணவர்களின் உடல்நலத்தை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு விளக்கம் அளித்துள்ளது. விளையாட்டு போட்டியை நிறுத்திவைப்பது குறித்து ஆலோசிக்க காற்றுத்தர மேலாண் ஆணையத்தை நீதிமன்றம் கேட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு நேரத்தை ரத்துசெய்தது அரசு.
+
Advertisement


