ஆவடி: ஆவடியில் இயங்கி வரும் இந்திய விமானப்படையின் பராமரிப்பு நிலையத்தில் நேற்று தளவாட பொருட்களின் வினியோகம், பராமரிப்பு பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தயார்நிலை குறித்து இந்திய விமானப்படையின் பராமரிப்பு பிரிவு தளபதியும் மூத்த அதிகாரியுமான ஏர்மார்ஷல் விஜய்குமார் கார்க் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அவருடன், அவரது மனைவியும், விமானப்படை குடும்ப நலச் சங்கத் தலைவருமான ரிதுகார்க், விமானப்படையின் குடும்ப நலச்சங்க உள்ளூர் பிரிவால் நடத்தப்படும் பல்வேறு நலவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்தார்.
அவர்களின் குடும்ப மற்றும் தனிப்பட்ட சுகாதாரம், கல்வி, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி ஆகியவற்றில் புதிய முன்னேற்றங்களை பற்றி அறிந்து கொள்ளவும் ஊக்குவித்தார்.
முன்னதாக, ஏர்மார்ஷல் விஜய்குமார் மற்றும் அவரது மனைவி ரிதுகார்க்கை ஆவடி விமானப்படை நிலையத் தலைவர் ஏர் கமோடர் பிரதீப் சர்மா, விமானப்படை குடும்ப நலச்சங்க (உள்ளூர்) தலைவர் குரூப் கேப்டன் (ஓய்வு) ரச்னா சர்மா வரவேற்றனர்.

