விமான சேவை நிறுவனங்களுக்கு 4 பிரிவுகளில் டிக்கெட் கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு..!!
டெல்லி: விமான சேவை நிறுவனங்களுக்கு 4 பிரிவுகளில் டிக்கெட் கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் விமான கட்டணம் உச்ச வரம்பு ரூ.18,000ஆக நிர்ணயித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 500 கி.மீக்கு குறைவான தொலைவுக்கு அதிகபட்ச விமான கட்டணமாக ரூ.7,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 500 முதல் 1000 கி.மீ. வரையிலான தொலைவில் பயணிப்பதற்கான அதிகபட்ச விமானக் கட்டணம் ரூ.12,000ஆக நிர்ணயித்தது. 1,000 முதல் 1,500 கி.மீ வரையிலான தொலைவுக்கு அதிகபட்ச விமான கட்டணம் ரூ.15,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 1,500 கி.மீ. மேல் தொலைவில் பயணிப்பவர்களுக்கு அதிகபட்ச விமான கட்டணம் ரூ.18,000ஆக நிர்ணயித்தது. உச்ச வரம்பை மீறி விமானக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்தது.


