சென்னை: அந்தமான் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் மோசமான வானிலையால் சென்னைக்கே திரும்பியது. அந்தமான் செல்ல வேண்டிய 174 பயணிகள், சென்னை விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்தமான் விமான நிலைய பகுதியில், தரைக்காற்று அதிகமாக வீசியதால் விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
+
Advertisement