Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் வான் பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க டெண்டர் விடுத்தது ராணுவம்

புதுடெல்லி: வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்​யூஆர்​எஸ்​ஏஎம்), வாங்​கு​வதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்​பிலான டெண்டரை ராணுவம் வெளி​யிட்​டுள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்கு பதிலடி​யாக சீனா மற்​றும் துருக்கி அளித்த ட்ரோன்​களை பாகிஸ்​தான் பயன்​படுத்​தி​யது. அப்​போது வான் பாது​காப்பு கருவி​களை பயன்​படுத்​தி, அவற்றை நமது ராணுவம் நடு வானில் சுட்டு வீழ்த்​தி​யது. தற்​போது எல்​லைப் பகு​தி​யில் வான் பாது​காப்பு கருவி​களை அதி​கள​வில் பயன்​படுத்த ராணுவம் முடிவு செய்​துள்​ளது.

எதிரி நாட்டு போர் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள், ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன் தாக்​குதலை முறியடிக்க ‘ஆனந்த் சாஸ்த்​ரா’ என்ற வான் பாது​காப்பு ஏவு​கணை​களு​டன் கூடிய வாக​னம் (க்​யூஆர்​எஸ்​ஏஎம்) ஒன்றை ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையம் (டிஆர்​டிஓ), பாரத் எலக்ட்​ரானிக்ஸ் மற்​றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்​துறை நிறு​வனங்​களு​டன் இணைந்து தயாரித்​தது.

இதில் 360 டிகிரி ரேடார், ஜாமிங் ஷீல்​டு, லாஞ்​சர் மற்​றும் ஏவு​கணை​கள் உள்​ளன. இது 30 கி.மீ தூரத்​தி​லும், 6 முதல் 10 கி.மீ உயரத்​தி​லும் வரும் எதிரி​நாட்டு விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள், ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன்​களை அழிக்​கும்.

எல்​லை​யில் பாது​காப்பு பணி​யில் ஈடு​படும் ராணுவத்​தின் பீரங்கி படை​யினருக்கு தேவை​யான வான் பாது​காப்பை அளிக்க இந்த க்யூஆர்​எஸ்​ஏஎம் வாக​னங்​கள் தேவைப்​படு​கின்​றன. இதனால் 3 படைப் பிரிவு​களுக்கு தேவை​யான வான் பாது​காப்பு ஏவு​கணை வாக​னங்​கள் தயாரித்து கொடுக்க ராணுவம் ரூ.30,000 கோடி மதிப்​பில் டெண்​டர் விடுத்​துள்​ளது. ஒவ்​வொரு படைப்​பிரி​விலும் 9 வான்​ பாது​காப்​பு ஏவு​கணை வாக​னங்​கள்​ இடம்​ பெறும்​.