சென்னை: தோகாவிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரை சோதனையிட்டபோது, சூட்கேசுக்குள் கருப்பு பேப்பர் சுற்றப்பட்ட ஒரு சிறிய பார்சலில் தங்க கட்டிகள் இருந்தன. அவற்றின் எடை சுமார் ஒரு கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.95 லட்சம். பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement