புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொநதமான ஏஐ2913 பயணிகள் விமானம் பயணிகள், விமானிகள் உள்பட 90 பேருடன் டெல்லியில் இருந்து புறப்பட்டது. விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானியின் வலதுபுறமுள்ள இன்ஜினில் தீ என்று எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதுகுறித்து உடனே டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கமான நடைமுறைகளின்படி பாதிக்கப்பட்ட இன்ஜினை விமானிகள் நிறுத்தினர். இடதுபுறம் உள்ள இன்ஜின் உதவியுடன் விமானம் டெல்லி திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 6.15 மணிக்கு விமானம் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.