புதுக்கோட்டை: அன்புச்சோலை - முதியோர் மனமகிழ் வள மையம் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.10 கோடி மதிப்பில் 25 அன்புச்சோலை மையங்களை இன்று தொடங்கி வைத்துள்ளேன். எல்லோருக்கு எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம். 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரத் தேவையில்லை வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
+
Advertisement

