பாட்னா: ஒடிசாவை சேர்ந்த ராகவேந்திர சாகு என்பவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தார். நேற்று காலையில் இருந்தே சாகு தங்கியிருந்த விடுதி அறை திறக்கப்படவில்லை. அறையின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த மாணவர்கள் கல்லூரியின் நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அறை கதவை உடைத்து பார்த்த போது படுக்கையில் சாகு இறந்து கிடந்தார். இறந்ததற்கான தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.