Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுகவின் உண்மைத் தொண்டர்... செங்கோட்டையன் கருத்துக்கு சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு

சென்னை: அதிமுகவின் உண்மைத் தொண்டர் செங்கோட்டையன் என வி.கே.சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார். கோபிச்செட்டி பாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரோடு ஷோவில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எஸ்.டி.சோமசுந்தரம், கோவை செழியன் போன்றோர் அதிமுகவில் இருந்து விலகியபோது, அவர்களது இல்லத்திற்கே சென்று தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி நீங்கள் கட்சியிலேயே இருக்க வேண்டும் என அவர்களை அழைத்தார். என் பெயரை உச்சரி, நீ வெற்றி பெறுவாய் என எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார். வெளியே சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும்.. மறப்போம்.. மன்னிப்போம். அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக பல தியாகங்களை செய்துள்ளேன். அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து 6 மூத்த தலைவர்கள் இபிஎஸ்-ஐ சந்தித்தோம். னது கோரிக்கையை ஏற்றால்தான். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க கெடு விதித்தார். தன்னை கடுமையாக விமர்சித்தவர்களையும் அரவணைத்து கட்சியையும் ஆட்சியையும் நடத்தினார் ஜெயலலிதா என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், செங்கோட்டையன் பேச்சுக்கு சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து கூறியதாவது,

செங்கோட்டையன் பேச்சு சசிகலா வரவேற்பு

செங்கோட்டையனின் பேச்சுக்கு ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா வரவேற்பு தெரிவித்தார். செங்கோட்டையனின் கருத்துகள் ஒவ்வொன்றும் அதிமுக தொண்டர்களின் கருத்து. ஒன்றுபட்ட அதிமுகவால்தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தனது உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். பல்வேறு நெருக்கடியான கால கட்டங்களில் உடன் இருந்தவர் செங்கோட்டையன். ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம் என செங்கோட்டையன் பேச்சை குறிப்பிட்டு வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டார்.

செங்கோட்டையன் கருத்துக்கு வைத்திலிங்கம் வரவேற்பு

பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையன் கருத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடுவுக்கு பின் எனது கருத்தை கூறுகிறேன். பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் அதிமுகவில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார் என தெரிவித்தார்.

செங்கோட்டையன் பேச்சுக்கு ஒ.பி.எஸ். வரவேற்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரிந்தவர்களை ஒன்றிணைக்கவேண்டும் என்ற செங்கோட்டையன் பேச்சுக்கு ஒ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்தார். மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம். செங்கோட்டையனின் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துகள் என தெரிவித்தார்.

செங்கோட்டையன் நினைப்பது நல்ல விஷயம் - நயினார்

அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டும் என செங்கோட்டையன் நினைப்பது நல்ல விஷயம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்ற செங்கோட்டையன் முயற்சிக்கு பாஜக வரவேற்பு தெரிவித்தது.

செல்வப்பெருந்தகை வரவேற்பு

அதிமுக - பாஜக கூட்டணியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழக காங்.கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இன்று செங்கோட்டையன் கெடு விதித்தது அதிமுக - பாஜக கூட்டணிக்கு கெடு விதித்து விட்டார்கள் என்பதை காட்டுகிறது என சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை பேட்டியளித்தார்.

திருமாவளவன் வரவேற்பு

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக சொல்லலாம் என திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.