போடி: அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்படுவீர்கள் என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதில் அளித்து உள்ளார். தேனி மாவட்டம், போடி அருகே தேனி சாலையில் உள்ள அணைக்கரைப்பட்டி பிரிவில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை நேற்று காலை சந்தித்த செய்தியாளர்கள், ‘அனைவரையும் கூட்டணியில் சேர்க்க அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா’ என கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அதுகுறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்’’ என்றார். ‘பாஜ தரப்பினர் அண்ணாமலை, டிடிவி, நீங்கள் இணைவதற்கு தீவிர முயற்சி எடுத்து வருகிறார்களே’ என்று கேட்டதற்கு, ‘‘தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், பிரிந்திருக்கும் அதிமுகவினரை ஒன்றிணைய வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். எனது தலைமையில் 15ம் தேதி நடக்கும் பொதுக்குழு தீர்மானம் பற்றி தெரிந்த பிறகே முழு கருத்து கூற முடியும்’’ என்றார்.
+
Advertisement


