அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் கருத்தைத்தான் நான் பிரதிபலித்தேன்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் கருத்தைத்தான் நான் பிரதிபலித்தேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் 'அதிமுகவை எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார், ஜெயலலிதா கட்டிக் காத்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றவே நான் மனம் திறந்து பேசினேன். நான் மனம் திறந்து பேசியதை அதிமுக தொண்டர்கள் பெருமளவில் வரவேற்றுள்ளனர். மறப்போம் மன்னிப்போம் என்று கூறியவர் அறிஞர் அண்ணா. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது புரிய வேண்டியவர்ளுக்கு புரிய வேண்டும்' எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க பழனிசாமிக்கு விடுத்த 10 நாள் கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு பேசியுள்ளார்.