தேனி: அதிமுகவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் என தேனி பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்குப் பேட்டியத்துள்ளார். மேலும் 'கட்சி ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற எனது கருத்தை செங்கோட்டையன் கூறத் தொடங்கி உள்ளார். நயினார் நாகேந்திரனிடம் எனது செல்போன் எண் உள்ளது. அவர் பேசட்டும்' எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச தயார் என நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
+
Advertisement