சென்னை: 50 ஆண்டுகளாக கட்சியில் உள்ள என்னை தனிப்பட்ட முறையில் யாரும் இயக்க முடியாது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். என்னுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்; நல்லதே நடக்கும். அதிமுகவில் உள்ளவர்களுடன் பேசி வருகிறேன்; அதுகுறித்து வெளியில் தெரிவித்தால் அவர்களுக்கு ஆபத்து. அதிமுகவில் இருந்து யார் யார் என்னுடன் பேசுகின்றனர் என்பது எனக்கும் அவர்களுக்கும் மட்டும்தான் தெரியும். எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மருமகன் உள்ளிட்டோரின் குடும்ப ஆதிக்கம் அனைத்திலும் உள்ளது. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்திருப்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறினார்.
+
Advertisement
