அதிமுக வலிமையாகவே உள்ளது, கூட்டணி கட்சியை உடைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
மதுரை: அதிமுக வலிமையாகவே உள்ளது, கூட்டணி கட்சியை உடைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; அதிமுக வலிமையாகவே உள்ளது, கூட்டணி கட்சியை உடைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. டிடிவி தினகரனோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை; ஒபிஎஸ் உடன் பேசத் தயாராக இருக்கிறேன். செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்ததால் எங்கள் கூட்டணியில் எந்த இடர்பாடும் கிடையாது.
அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பு பற்றிய தகவல் முழுமையாக எனக்கு தெரியாது. அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தொடர்ந்து மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக பரவும் தகவல் குறித்து விளக்கம் அளித்த அவர்; பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டிய அவசியம் எதுவுமில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். உள்துறை அமைச்சர் தனது வீட்டுக்கு நேரில் வந்து நலம்விசாரித்துச் சென்றார். என்று கூறினார்.