அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர் சு.ரவி எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை போலீசாரின் தடையை மீறி தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த அரக்கோணம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ சு.ரவி உள்பட 100 பேரை கைது செய்தனர். அனைவரையும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால், அரக்கோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
+
Advertisement