சென்னை: எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு அதிமுகவை வாடகைக்கு எடுத்து, அந்த கட்சியை உள் வாடகைக்கு பாஜவிடம் கொடுத்திருக்கிறார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை டி.என்.ராஜரத்தினம் அரங்கத்தில் நடந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டு, பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார். பாஜவுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு, நமக்கு செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு யாரை எதிர்த்து போராட போகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டிருக்கிறார். மாநில உரிமைக்காக தமிழ்நாடு போராடும், சமூகநீதியை காக்க தமிழ்நாடு என்றும் போராடும், மதவெறியை, சாதிவெறியை எதிர்த்து தமிழ்நாடு நிச்சயம் போராடும், இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு தொடர்ந்து போராடும், ஒரே வரியில் சொன்னால் ஒன்றிய பாசிச பாஜவை எதிர்த்து தமிழ்நாடு என்றைக்கும் போராடும்.
இன்றைக்கு ஆளுநர் ரவி பேசும்போது அவர் தமிழ் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாராம். தமிழ்நாடு போராடாமல் இருந்திருந்தால், ஆளுநர் ரவி இன்றைக்கு தமிழில் பேசியிருக்க மாட்டார். நாம் தான் இந்தியில் பேசியிருப்போம். பாஜவுக்கு பழைய அடிமைகள் பத்தாமல், இன்றைக்கு புதுப்புது அடிமைகளையும் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அதிமுகவின் நிலைமை என்ன.. எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு அதிமுகவை வாடகைக்கு எடுத்து, அந்த கட்சியை உள் வாடகைக்கு பாஜவிடம் கொடுத்து இருக்கிறார்.
தமிழ் மண்ணில், எந்த காலத்திலும், பாசிஸ்ட்டுகளை அனுமதிக்காமல் இருப்பது தான், ஆனைமுத்துவுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். ஆகவே, 2026 சட்டமன்றத் தேர்தலில், சங்கிகளையும் அவர்களின் அடிமைகளையும் மீண்டும் விரட்டியடிக்க நாம் அத்தனைபேரும் உறுதியேற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு யாரை எதிர்த்து போராட போகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டிருக்கிறார். மாநில
உரிமைக்காக தமிழ்நாடு போராடும், சமூகநீதியை காக்க தமிழ்நாடு என்றும் போராடும், மதவெறியை, சாதிவெறியை எதிர்த்து தமிழ்நாடு நிச்சயம் போராடும்,