சேலம்: அதிமுகவை பலவீனப்படுத்த யார் முற்பட்டாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 6 மாதங்களாக கட்சிக்கு எதிராகவே செங்கோட்டையன் செயல்பாடு இருந்து வருகிறது. கட்சி சார்பற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என தவறான கருத்தை செங்கோட்டையன் கூறினார். கட்சி சார்பற்ற நிகழ்ச்சி என ஏற்பாட்டாளர் விளக்கம் அளித்தபோதும் செங்கோட்டையன் ஏற்கவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று செங்கோட்டையன் செயல்பட்டார்
ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல; அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கரம்கோர்த்துள்ளார் செங்கோட்டையன். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸுடன் தொடர்பு வைக்கக் கூடாதென பொதுக்குழுவில் தீர்மானம். கோடநாடு வழக்கில் அதிமுக ஆட்சியில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோடநாட்டில் 2,3 கொலைகள் நடந்துள்ளதாக பேசுகிறார் செங்கோட்டையன் -எடப்பாடிசெங்கோட்டையன் போன்றவர்களை எல்லாம் கட்சியில் வைத்திருந்தால் எப்படி இருக்கும்? செங்கோட்டையன் பேச்சு மூலம் அவரது வன்மம் வெளிப்பட்டு விட்டது.
அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? துரோகம் செய்பவர்கள் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாக கூற முடியும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஓபிஎஸ் எதிர்த்து வாக்களித்தார். 2011ல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததாக சொல்லும் செங்கோட்டையன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? ஜெயலலிதா இருந்தவரை 10 ஆண்டுகாலம் சென்னைக்கே வராதவர் செங்கோட்டையன். நான் முதலமைச்சரான பின்னர் தான் செங்கோட்டையனை அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் நியமித்தேன்.
ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களுக்கு சசிகலா பதவி வழங்கினார். 10 ஆண்டுகாலம் வனவாசம் போனவர் எங்களைப்பற்றி பேசுவதா?. அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன். அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. 18 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து அழைத்துச் சென்றவர் டிடிவி தினகரன். அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? துரோகம் செய்பவர்கள் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாக கூற முடியும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ்.
தனக்கு பதவி இல்லையென்றால் எந்த எல்லைக்கும் ஓபிஎஸ் செல்வார் என்பது இதன்மூலம் தெரிந்தது. அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளன. சந்தர்ப்பங்களுக்கு தகுந்தார்போல தங்களை மாற்றிக் கொள்பவர் டிடிவி, ஓபிஎஸ். டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தங்களுக்கே விசுவாசமாக இருக்க மாட்டார்கள். செங்கோட்டையனுக்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறுவது தவறு; அவரை எந்த எம்.எல்.ஏ. ஆதரித்தார். மாய உலகத்தை உருவாக்கி 'கோபிசெட்டிபாளையத்தில் சிற்றரசர் போல நடந்து கொண்டிருந்தார் செங்கோட்டையன்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீதிமன்றம் மூலம் கிடைக்கப்பெற்றது. அதிமுகவை பலவீனப்படுத்த யார் முற்பட்டாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறினார்.
