மதுரை: அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் எல்லோரும் டெல்லி செல்கிறார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்; யார் முதல்வராக வந்தாலும் ஏற்போம் என்று அமித் ஷா முன்னிலையில் தினகரன் கூறினார். தற்போது எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என தினகரன் கூறுகிறார். அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் எல்லோரும் டெல்லி செல்கிறார்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ள நன்மைகளை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல் சுபதி பற்றி தெரிந்திருக்கும். மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கான பாஜக பூத் கமிட்டி மாநாடு திண்டுக்கல்லில் செப்.21 ஆம் தேதி நடைபெறும். மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.