அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் மீதான விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
2016ம் ஆண்டு பிரவீன் சென்ற காரும், வீரசுரேகா என்ற பெண் சென்ற காரும் மோதிய விபத்தில் அப்பெண் உயிரிழந்தார். இவ்வழக்கில் பிரவீனுக்கு ஓராண்டு சிறை தண்டனை அவிநாசி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.
தண்டனைக்கு எதிரான பிரவீனின் மேல்முறையீடு திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பிரவீனின் அரசியல் பின்புலத்தால் விசாரணை பாரபட்சமாக நடந்துள்ளது எனக் கூறி புகழேந்தி தரப்பு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.இம்மனு நீதிபதி செந்தில்குமார் முன்பு அக்டோபர் 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது.