டெல்லி: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு நடவடிக்கைக்களை மேற்கொள்ள கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தக்கல் செய்துள்ளன. இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு ஆதரவாக அதிமுக உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், அதிமுக விரும்பும் வகையில் எஸ்.ஐ.ஆர். நடைபெற வேண்டும் என்றால் தனி வழக்கு தொடரலாம் என கூறியுள்ளது. 3 ஆண்டுகள் நடத்த வேண்டிய எஸ்.ஐ.ஆர். பணியை ஒரே ஆண்டில் நடத்தப் பார்ப்பதாக உச்சநீதிமன்றத்தில் திமுக குற்றம்சாட்டியுள்ளது.
குறைபாடுகளை தேர்தல் ஆணையம் சரி செய்யும் என நினைக்கின்றேம் என நீதிபதிகள் கூறினர். எஸ்.ஐ.ஆர். வழக்கை ஐகோர்ட் விசாரிக்க கூடாது. மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தால் விசாரணையை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
