ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; அதிமுகவில் கிளை செயலாளராக எனது கட்சி பணியை தொடங்கினேன். 1972- ல் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோதே எங்கள் ஊரில் கிளைக்கழகத்தை தொடங்கினோம். 1975ல் பொதுக்குழுவை நடத்துவதற்கான குழுவில் என்னை பொருளாளராக நியமித்தனர். 1977ல் சத்தியமங்கலம் தொகுதியில் என்னை போட்டியிடுமாறு எம்ஜிஆர் அறிவுறுத்தினார். எம்ஜிஆருக்கு பிறகு கட்சியை வழிநடத்தும் திறமை ஜெயலலிதாவுக்கே உண்டு என்று தலைவர்களுடன் நானும் சென்று வேண்டுகோள் விடுத்தேன். அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன் என அவர் கூறினார்.
+
Advertisement