சென்னை: தலைவர்கள் இணையாவிட்டால், தொண்டர்கள் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும். அதிமுக சட்டவிதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டனர். அதிமுக சட்டவிதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. செங்கோட்டையனுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.
+
Advertisement