அதிமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்..!!
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்.
1990களில் பாஜகவில் இருந்த மைத்ரேயன், பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மயிலாப்பூரைச் சேர்ந்த வி.மைத்ரேயன் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக இருந்தவர். அதிமுக பிளவுபட்டபின் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மைத்ரேயன் பின்னர் பாஜகவில் சேர்ந்தார்.
பாஜகவிலிருந்து விலகி 2024 செப்டம்பரில் இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். அதிமுகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. மீண்டும் மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில் மைத்ரேயனும் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.