சென்னை: அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழி நடத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். பாஜகதான் அதிமுகவை வழிநடத்துகிறது என்பதற்கு அமித் ஷாவுடனான சந்திப்பே எடுத்துக்காட்டு. மோடியா, லேடியா என்ற ஜெயலலிதாவின் அதிமுக இன்று அண்ணன் அமித் ஷா சொல்படிதான் நடக்கும். அமித் ஷா சொல்படியே அதிமுக இனி நடக்கும் என்பதை டெல்லி சந்திப்புகள் உறுதிப்படுத்திக்கின்றன என அவர் தெரிவித்தார்.
+
Advertisement