புதுடெல்லி: ஏ.ஐ மூலம் உருவாக்கப்படும் டீப்பேக் படம், வீடியோக்களைத் தடுப்பதற்கும் அதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் நேற்று விசாரணை கொண்டது. இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சோலி சித்தர் ஜெனரல் உஷார் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஏற்கனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. எனவே இதில் புதியதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படும் அவசியம் தற்போது இருக்கும் சூழலில் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து மெட்டா நிறுவனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘‘அரவிந்த் தாதர், மத்திய அரசு பல சுற்று விவாதங்களையும், ஆலோசனைகளையும் நடத்தியுள்ளதாகவும், அதன் பிறகு இப்போது கிமி விதிகளின் தொகுப்பை வகுத்துள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘‘ இந்த வரைவு விதிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு அனைத்து நிறுவனளுக்கும் கருத்துகளை தெரிவிக்க ஒன்றிய அரசு அரசு வழிவகை செய்து வருகிறது என்று கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, ஏஐ மற்றும் டீப்பேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்களை மனுவில் கோரிக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், அரசாங்கம் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வடிவமைத்து, கருத்துக்காக பொது களத்தில் வெளியிட்டுள்ளதால், இந்த கட்டத்தில் மேலும் உத்தரவுகளை பிறப்பிக்க எந்த காரணமும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.

