Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

AI வளர்ச்சியால் உலகில் அதிகரிக்கும் ஏழை - பணக்காரர் பாகுபாடு: ஐ.நா. எச்சரிக்கை

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் நடத்திய ஆய்வின் முடிவில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியானது. சமத்துவமின்மையை அதிகரித்து நாடுகளுக்கிடையேயான டிஜிட்டல் மற்றும் பொருளாதார இடைவெளியை விரிவாக்கும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கணினி அறிவியல் யுகத்தில் புதிய பாய்ச்சலாக AI உருவெடுத்துள்ளது. இதனால் தற்போதைய யுகத்தை AI யுகம் என்று சொல்லும் அளவிற்கு AI தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகளாவிய முன்னேற்றத்திற்கும் மனித வாழ்கை மேம்பாட்டிற்கும் இது புதிய வாய்ப்புகளை திறந்து வைக்கிறது. கிராமப்புறங்களிலிருந்து மருத்துவத்துறை வரை வேளாண் ஆலோசனை துரித மருத்துவ பரிசோதனை துல்லியமான காலநிலை கணிப்புகள் மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை போன்ற பல துறைகளில் AI மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும் ஆற்றல் மிக்கதாய் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தரவு பாகுபாடு deep fack அச்சுறுத்தல்கள், சைபர் தாக்குதல்கள் , ஆதீத மின்சார நுகர்வு, வேலைவாய்ப்பு இழப்புகள் மற்றும் சமூகங்களுக்கு இடையேயான டிஜிட்டல் இடைவெளியை விரிவுபடுத்துதல் போன்ற சவால்களும் AI ஆல் பெருகி வருகின்றன.

இதற்கு நடுவே AIயை யார் எப்படி எந்த அளவு பயன்படுத்துகின்றனர் என்ற கேள்வியை உலக நாடுகளுக்கு முக்கிய கொள்கை சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் ஐநா அமைப்பு இயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ததில் AIயின் வளர்ச்சியால் உலகநாடுகளுக்கிடையே, ஏழை , பணக்காரர் பாகுபாடு மேலும் உயரும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உலகத்தில் AI வேகமாக வளர்கிறது. ஆனால் அதன் பலன் அனைவர்க்கும் சமமாக கிடைக்கப்போவதில்லை என்றும் எச்சரித்துள்ளது.