Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இனி 3-ஆம் வகுப்பு முதல் AI பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.. ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம்!!

டெல்லி: மனிதன் உருவான காலத்தில் இருந்து பல யுகங்களை கடந்து வரும் போதும் ஒவ்வொரு வளர்ச்சியை அடைந்து வருகிறோம். தொழிநுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் புதிதாக உருவாகி கொண்டே இருக்கும். அதற்கேற்ப மனிதர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம். கம்ப்யூட்டர் காலம், இன்டர்நெட் காலம், சோசியல் மீடியா காலம் என்று ட்ரெண்டுக்கு ஏற்றவாறு மக்களால் சொல்லப்படுவது உண்டு. அந்த வகையில் மனிதர்களுக்கு சவாலாக உருவாக்கப்பட்டது தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் அர்டிபிசியால் இன்டெர்லிஜென்ஸ் அதாவது ஏஐ தொழில் நுட்பம். மிகவும் பிரபலமாகி வரும் இந்த தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இத்தகைய தொழில்நுட்பத்தை ஆரம்பகால கல்வியிலிருந்தே குழந்தைங்கள கற்றுக்கொள்வது காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

இந்த ஏஐ படிப்பு இனி பள்ளி குழந்தைகள் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே கற்றுக்கொள்ள போகிறார்கள் என்று செய்திதான் பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. காரணம் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருக்கும் இந்த திட்டம் எதிர்கால இந்திய மாணவர்களை டிஜிட்டல் யுகத்திற்கு தயார்படுத்தும் முக்கிய முயற்சி என கருதப்படுகிறது. அதாவது ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருப்பதன்படி 2026-2027 கல்வி ஆண்டு முதல் நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மூன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏஐ பற்றிய பாடத்திட்டம் கட்டாயமாக சேர்க்கப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பேரவை NCERT மூலம் உருவாக்கப்படுகிறது.

மாணவர்களின் வயது மற்றும் கற்றல் நிலைக்கு ஏற்ப அடிப்படை தரப்பில் ஏஐ என்றல் என்ன? ரோபோக்கள் எப்படி இயக்கப்படுகின்றன. மிஷின் லேர்னிங் என்றல் என்ன? போன்ற எளிமையான விளக்கங்களுடன் தொடங்கி மேல்தரங்களில் டேட்டா அனாலிசிஸ், கோடிங், ஏஐ எத்திக் யூஸ் போன்ற ஆழமான கருத்துக்களும் சேர்க்கப்படுகின்றன. இன்றைய உலகில் ஏஐ தொழில் நுட்பம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மாணவர்கள் அதை ஆரம்பத்தில் இருந்தே கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் உலகளவில் இந்தியவை முன்னிலையில் நிறுத்தப்படும். அதாவது குழந்தைகள் சிறுவயதில் இருந்தே சிந்தனைத் திறன், பிரச்சனை தீர்க்கும் திறன் மற்றும் டிஜிட்டல் திறமை வளர்க்கும் நோக்கத்தில் தான் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது.

3ஆம் முதல் 5ஆம் வகுப்பு வரை ஏஐ அடிப்படை விளக்கங்கள், விளையாட்டு திறன் பயிற்சிகள் வழங்கப்படும். 6ஆம் முதல் 8ஆம் வகுப்பு வரை சிறு ரோபோக்கள், கோடிங் பிளாக்ஸ், லாஜிக்கல் கேம்ஸ் பாடங்கள் இருக்கும். 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மெஷின் லேர்னிங், டேட்டா செயின்ஸ், ஏஐ எத்திக்ஸ் ஆகியவை இடம்பெறும். இதற்காக ஏஐ லேப்ஸ், டிஜிட்டல் கிளாஸ் ரூம், டீச்சர் ட்ரைனிங் ப்ரொக்ராம்ஸ் ஆகியவை நாடுமுழுவதும் அமைக்கப்பட உள்ளனர். மாணவர்களின் டிஜிட்டல் திறன்கள் அதிகரிக்கும் போது இந்தியா மாணவர்கள் குளோபல் டெக்னாலஜிஸ் நிறுவனங்களில் முன்னணி பங்குள் வகிப்பார்கள். எதிர்காலத்தில் ஏஐ அடிப்படையிலான தொழில்கள் உருவாகும் போது இந்தியாவே முக்கிய மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.