அகமதாபாத்: 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து இந்தியா சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்நிலையில், காமன்வெல்த் போட்டி நிர்வாகக்குழு 2030ம் ஆண்டு அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டியை நடத்த பரிந்துரை செய்து உள்ளது.
இந்த பரிந்துரை காமன்வெல்த் போட்டிக்கான முழு உறுப்பினருக்கு அனுப்பப்பட்டு, அதன்பின் இறுதி முடிவு நவம்பர் 26ம் தேதி எடுக்கப்படும். 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியையும் அகமதாபாத்தில் நடத்த இந்தியா முயற்சி செய்து வருகிறது.