அகமதாபாத் விமான விபத்து.. சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் பிழைத்தேன்: விஸ்வாஷ் குமார் ரமேஷ் உருக்கம்!!
அகமதாபாத்: விமானத்தில் உள்ளே இருந்த 243 பேரும் உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. அகமதாபாத் விமான விபத்தில் 241 பேரும் உயிரிழந்து விட்டதாக ஏர் இந்திய நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்ற ஒரு பயணி மட்டும் காயங்களுடன் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரிட்டன் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் இவர் இந்தியாவில் உள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். பின்னர் தனது அஜய் குமார் ரமேஷுடன் லண்டன் சென்றபோது விபத்தில் சிக்கிய தெரியவந்தது.
விஸ்வாஷ் குமாருக்கு 11ஏ சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த இருக்காய் எகானமி வகுப்பில் முதல் வரிசையில் ஜன்னலுக்கு பக்கத்தில் உள்ளது. விமானத்தில் இறக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்னதாக நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே 11ஏ இருக்கை அமைந்துள்ளது. விபத்து நடக்கும் சில நெடிகளுக்கு முன் பயணிகளுக்கு எமர்ஜென்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விஸ்வாஷ் குமார் ரமேஷ் உஷாராக இருந்துள்ளார். விமானம் தரைக்கு அருகே வந்து மோதும் நொடியில் சுதாரித்துக் கொண்ட அவர் விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியே வெளியே குதித்து காயங்களோடு பிழைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஸ்வாஷ் குமார் ரமேஷ் அளித்த பேட்டியில்; விமானம் புறப்பட்ட 30 நொடிகளில் பயங்கர சத்தம் கேட்டதாகவும், பின்னர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாகவும் விஸ்வாஷ் குமார் தெரிவித்துள்ளார். சீட் தனியாக வந்ததால் என்னால் வெளியே வர முடிந்தது. சீட் உடைந்து தனியாக வந்ததால் ஒரு பக்க அவசர வழி சேதமடைந்த நிலையில், மறுபக்க அவசர வழி வழியாக வெளியேறினேன். இவை எல்லாம் மிகவும் விரைவாக நடத்துவிட்டது என அவர் கூறியுள்ளார். தன்னை சுற்றி உடல் பாகங்களும், நெருங்கிய விமானத்தின் சில பகுதிகளும் கிடந்தன என பதற்றத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால் தனது சகோதரருக்கு வேறு வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு இருந்ததாக விஸ்வாஷ் குமார் ரமேஷ் கவலையுடன் கோரியுள்ளார்.