Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாய நிலத்தை வாங்கி மனைவி பெயரில் ரியல் எஸ்டேட் சொத்துக்கு மேல் சொத்து குவித்த அண்ணாமலை: அடுத்தடுத்து கிழியும் மிஸ்டர் கிளீன் முகமூடி

கோவை: விவசாய நிலத்தை வாங்கி மனைவி பெயரில் ரியல் எஸ்டேட் நடத்தி சொத்துக்கு மேல் சொத்து அண்ணாமலை வாங்கி குவித்து உள்ளார். இதனால், அண்ணாமலையின் மிஸ்டர் கிளீன் முகமூடி கிழிந்து உள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் வேலுமணியின் தீவிர ஆதரவாளருமான பிரதீப் அவரது சித்தப்பா டி.ஏ.பெருமாள்சாமி மற்றும் அவரது வாரிசுகளிடம் இருந்து வாங்கி உள்ளனர்.

இந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த நிலத்தை ஒட்டி நொய்யல் ஆற்றும் உள்ளது. நொய்யல் ஆற்று நிலத்தையும் அண்ணாமலை ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.80 கோடி என்று கூறப்படுகிறது. இதை மறைத்து மொத்த நிலத்திற்கும் சேர்த்து வெறும் ரூ.4.5 கோடியை செக்காக கொடுத்து நிலம் வாங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 4.5 கோடி ரூபாயும் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அண்ணாமலை சொத்து மேல் சொத்து வாங்கி குவித்து உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை மற்றும் அகிலா ஆகியோருக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.5 கோடிக்கும் குறைவாகதான் வருமானம் உள்ள நிலையில், நிலம் வாங்க எப்படி ரூ.4.5 கோடி எப்படி வந்தது என நெட்டிசனகள் கேள்வி எழுப்புகின்றனர். இதுதொடர்பாக பாஜக பெயரை தவிர்த்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இதில் நிலத்தை பதிவு செய்ய அண்ணாமலை செலுத்திய கட்டணத்தை மட்டும் கூறிய நிலையில், எவ்வளவு தொகை கொடுத்து அண்ணாமலை வாங்கினார் என்பது குறிப்பிடவில்லை.

பத்திரப்பதிவிற்கு அண்ணாமலை செல்லாத நிலையில், பவர் ஆப் அட்டர்னி அவரது மனைவி அகிலாவிற்கு காளப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் வழங்கியதாக விளக்கம் அளித்தார். ஆனால் காளப்பட்டி பகுதியில் இல்லாத பத்திரப்பதிவு அலுவலகத்தில் எப்படி பவர் ஆப் அட்டர்னி வழங்கியிருக்க முடியும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அண்ணாமலைக்கு ஏற்கனவே கரூர் சூடாமணி கிராமத்தில் ரூ.1.12 கோடி மதிப்புள்ள 62 ஏக்கர் நிலம் இருக்கும் நிலையில், சேமிப்பு மற்றும் கடன் வாங்கி ரூ.4.5 கோடி நிலத்தை வாங்கியதாகவும், அங்கு வங்கி மூலம் கடன் பெற்று பால் பண்ணை அமைக்க உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

கரூரில் சொந்தமான நிலம் உள்ள நிலையில் புதிதாக யாராவது கடன் வாங்கி நிலம் வாங்கி, லோன் போட்டு பால் பண்ணை அமைப்பார்களா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர். கோவை இக்கரை போளுவாம்பட்டியில் வாங்கிய நிலம்தான் தான் வாங்கிய முதல் சொத்து என அண்ணாமலை கூறிய நிலையில், அண்ணாமலை தனது மனைவி அகிலா பெயரில் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சல் பகுதியில் 1.2 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ராம்ராஜ் என்பவரிடம் இருந்து அகிலா மற்றும் பரோ ப்ராப்பர்டீஸ் பிரைவட் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து அந்த விவசாய நிலத்தை வாங்கியுள்ளனர். பின்னர் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதமே நடைபாதை போட்டு, வீட்டுமனையாக மாற்றி ரியல் எஸ்டேட் வியாபாரத்தை துவக்கி உள்ளனர். இந்த சொத்து குறித்த விபரத்தை அண்ணாமலை 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தாக்கல் செய்த அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார். ரூ.72 லட்சத்திற்கு வாங்கிய நிலத்தை ரூ.48 லட்சத்திற்கு வாங்கியதாக பொய்யான தகவலை கூறியுள்ளார்.

தனது மனைவி பெயரில் விவசாய நிலத்தை வாங்கி வீட்டுமனைகளாக மாற்றி ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வது தான், இயற்கை விவசாய நலனுக்காக அண்ணாமலை முன்னெடுக்கும் நடவடிக்கைகளா என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். மற்ற கட்சிகளின் ஊழல், சொத்து குவிப்புகள் தொடர்பான பைல்ஸ் களை வெளியிடுவதாக கூறிய அண்ணாமலையின், சொத்து விவரங்கள் கொண்ட பைல்ஸ் வெளியாகி வருவது அண்ணாமலைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

* அண்ணாமலை சொத்து விவரம்

2024 நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுவில் அசையும் சொத்துகளாக அண்ணாமலை பெயரில் ரூ.36 லட்சம் மதிப்பிலான சொத்துகளும், அவரது மனைவி அகிலா பெயரில் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகளும், அவர்களது மகள் ஆராதனா பெயரில் ரூ3 லட்சம் மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். இதேபோல அசையா சொத்துகளாக அண்ணாமலைக்கு ரூ.1.12 கோடி சொத்துகளும்,அகிலாவிற்கு ரூ.53 லட்சம் சொத்துகளும் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதேசமயம் இருவரின் கடந்த 5 ஆண்டு வருமானமே ரூ.1.5 கோடி கூட வராத நிலையில், அடுத்தடுத்து சொத்துகள் வாங்க எங்கிருந்து பணம் அண்ணாமலை குடும்பத்திற்கு வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்ணாமலையின்

5 ஆண்டு வருமானம்

2018-19 ரூ.9,34,706

2019-20 ரூ.7,67,020

2020-21 ரூ.11,39,640

2021-22 ரூ.11,77,010

2022-23 ரூ.20,51,740

அகிலாவின்

5 ஆண்டு வருமானம்

2018-19 ரூ.16,97,719

2019-20 ரூ.15,09,430

2020-21 ரூ.21,58,450

2021-22 ரூ.7,70,680

2022-23 ரூ.6,08,450

* அண்ணாமலைக்கு எதிராக திரும்பிய பாஜவினர்

ஒரு கட்சியில் இருக்கும் தலைவர் செய்யும் சொத்து குவிப்பு, விதிமீறல் உள்ளிட்ட புகார்களை மற்றவர்கள் கூறுவது வழக்கம். ஆனால் அண்ணாமலை சொத்து விவகாரத்தில் பாஜவினரே அவருக்கு எதிரான கருத்துகளையும் கூறுவதோடு, எவ்வாறு சொத்து குவித்தார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என நினைத்த சொந்த கட்சியினரே எதிராக இருப்பதால், அண்ணாமலை அதிருப்தி அடைந்துள்ளார்.

* ரியல் எஸ்டேட் செய்வதுதான் விவசாய நலனுக்கான முன்னெடுப்பா?

தான் நடத்தும் ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அறக்கட்டளை மூலம் இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக அண்ணாமலை கூறுகிறார். ஆனால் மனைவி பெயரில் விவசாய நிலத்தை வாங்கி வீட்டுமனைகளாக பிரித்து, ரியல் எஸ்டேட் செய்வது தான் இயற்கை விவசாயத்திற்கு செய்யும் முன்னெடுப்பா என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். மேலும் பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இப்படி நிலங்களில் முதலீடு செய்து வருவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.