Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அக்ரி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி அசத்தல் தொழில் முனைவோராகலாம்: வணிக யுக்தி ஆலோசகர் எம்.கே.ஆனந்த்

விவசாயத்தில் சிறுகுறு நிறுவனங்கள் தொடங்கி தொழில் முனைவோர்களாக நம்மை நாமே உயர்த்திக் கொள்ள முடியும் என வழிகாட்டுகிறார் "சி சேஞ்ச் " ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனரும், வணிக யுக்தி ஆலோசகருமான

எம்.கே.ஆனந்த்.

இதுகுறித்து, அவர் கூறியது: “பொருளாதாரம் தான் அனைத்தையும் தீர்மாணிக்கிறது. அந்த வகையில் உலகளவில் குறுசிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 50 சதவீதம் பொருளாதாரத்தை அதிகரிக்கும் பிரதானக் காரணிகளாக உள்ளன. 140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் விவசாயம், குறுசிறு நிறுவனங்கள்(எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் தான் பொருளாதார ஊக்கியாக உள்ளன.

அந்த வகையில் இந்தியாவில் 7 கோடி குறு சிறு நிறுவனங்கள் உள்ளன. அதாவது, 7 கோடி தொழில் முனைவோர்கள் உள்ளனர். இதில் 12 கோடி பேர் நேரடியாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் 10 கோடி அளவுக்கு ஆண்டுக்கு வருமானம் ஈட்டினால் அவை குறு நிறுவனங்கள் என்றும், 100 கோடிகள் வரை ஆண்டு வருமானம் ஈட்டினால் சிறு நிறுவனங்கள் என்றும் ,ஆண்டுக்கு ரூ.500 கோடிகள் வருவாய் ஈட்டினால் நடுத்தர நிறுவனங்கள் அன்றும் அரசு வரையறுத்துள்ளது.

நாட்டின் மொத்த உற்பத்தியில் எம்எஸ்எம்இ தான் 30 சதவீதம் பங்காற்றுகிறது.

அப்படிப் பார்க்கையில் இந்தியாவின் முதுகெலும்பு எம்எஸ்எம்இ யைச் சார்ந்துள்ளது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக எம்எஸ்எம்இ தொடர்பான "ஸ்டார்ட்அப்" என்பது பெருகி வருகிறது. 1 லட்சத்து 50 ஆயிரம் நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் "ஸ்டார்ட்அப்" பில் பதிவு செய்து, புதிதாகத் தொழில் தொடங்க வந்துள்ளனர்.

மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில், அனைவருக்கும் வேலை என்ற இலக்கை அடைய தற்போது உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை போதவில்லை. ஆக, அனைவருக்கும் வேலை வேண்டும் என முடிவெடுத்தால், நிறைய தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் இங்கு அவசியம்.

இளைஞர்கள், படித்தவர்கள், வணிக யோசனை கொண்டவர்கள், சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், "ஸ்டார்ட்அப்" என்ற கலாச்சாரத்துக்குள் வரத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலும் "ஸ்டார்ட்அப்"பில் வருபவர்கள் தொழில்நுட்பத்தை சாந்துள்ளனர்.

எம்எஸ்எம்.இ மற்றும் விவசாயத்தில் ஸ்டார்ட்அப் தொழில்கள் மூலமாக தொழில்நுட்ப புரட்சி அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளது.

ஸ்டார்ட்அப் பில் சிறுகுறு தொழிலுக்கான திட்டங்கள், வழிமுறைகளை முழுமையாக அறிந்து கொள்ள, வருகின்ற 17.08.2025 ( ஞாயிற்றுக்கிழமை) சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா 2.0" கலந்து கொள்ளுங்கள். முன்பதிவுக்கு 83000- 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.