காபூல்: ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே இரவு முழுவதும் நடந்த சண்டையில் ஒரு பாகிஸ்தான் இராணுவ நிலை தகற்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முந்தைய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் விவரித்தனர். தலிபான் படைகள் பல நிலைகளை குறிவைத்து, அவற்றைக் கைப்பற்றி சேதப்படுத்தியதாகவும் கூறினர்.
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் உயிரிழந்தனர். பின்னர், கத்தாரில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சண்டையை நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
இதனை தொடர்ந்து துருக்கில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நேற்றுமுன் தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றதாகவும் அப்போது நடந்த மோதலில் 25 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது
