ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்து: 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழப்பு பரிதாபமாக உயிரிழப்பு
காபுல்: ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெராத் மாகாணத்தின் குசாரா மாவட்டத்தில் இரவு 8:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது, ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் லாரி மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த குழந்தைகள் உட்பட 79 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மோசமாக எரிந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை, முக்கியமாக மோசமான சாலை நிலைமைகள் மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாகவும் விபத்துகள் நிகழ்கிறது. இந்தக் கொடூரமான சோகம், ஈரானில் இருந்து தங்கள் பயணங்களில் லட்சக்கணக்கான ஆப்கானிய குழந்தைகள் எதிர்கொள்ளும் கொடிய ஆபத்துகளை தெளிவாக நினைவூட்டுகிறது" என்று குழுவின் அதிகாரி சமிரா சயீத் ரஹ்மான் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.